நெல்லை: மதுரையில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்து நெல்லையில் நடந்த பாஜ ஆலோசனை கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: மதுரை திருப்பரங்குன்றத்தில் வரும் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு பாஜ சார்பில் நடக்கிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டங்கள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் தேசியமொழி குறித்து கனிமொழி சரியான பதிலை கூறியிருக்கிறார். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே சிறப்பானதாகும். அரசு பஸ்களில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன. எங்களது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும் வாய்ப்புள்ளது. இது தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.