விழுப்புரம்: எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; பாமகவில் நிர்வாகிகளை நீக்க எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பா.ம.க. கொறடாவாக அருள் உள்ளார். ஜி.கே.மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகுதான் நீக்க முடியும். எனது மனம் வேதனைப்படும் அளவுக்கு செய்திகள் வருகின்றன. எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கட்சியை நான் நடத்தி வருகிறேன் என அவர் கூறினார்.
எம்.எல்.ஏ. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை; நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது: ராமதாஸ் திட்டவட்டம்
0
previous post