விழுப்புரம்: தன்னுடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் வழங்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;
என்னுடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட்: ராமதாஸ்
தன்னுடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் வழங்கப்படும். என்னை சந்தித்து பொறுப்பு வாங்கிய நிர்வாகிகளே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாமகவில் தனக்கே அதிகாரம் உள்ளது: ராமதாஸ்
பாமகவில் தனக்கே அதிகாரம் உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறினார்.
பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தியது தவறு: ராமதாஸ்
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தியது தவறு. யாரையும் இழிவுபடுத்தக்கூடாது. இந்து முன்னணி சார்பில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தி வீடியோ ஒளிபரப்பப்பட்ட நிலையில், ராமதாஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.