திண்டிவனம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ராமதாஸ் தலைமையில் புதிய தலைமை நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஜி.கே.மணி, பு.தா.அருள்மொழி, முரளிசங்கர், சையத் மன்சூர் உசேன், கரூர் பாஸ்கரன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், அன்புமணி, திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் இருந்த தலைமை நிர்வாக குழு கலைக்கப்பட்டது. புதிய நிர்வாகக் குழுவில் அன்புமணி மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில் மற்ற நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டனர்.
பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை..!!
0