புதுடெல்லி: போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ள பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் மாநிலங்களுக்கு செல்கிறார். மகாராஷ்டிராவில் 11 லட்சம் புதிய லட்சாதிபதி பெண்களை பிரதமர் மோடி கவுரவிக்க உள்ளார். சுய உதவிக்குழு பெண் உறுப்பினர்கள், ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் சம்பாதிக்க லட்சாதிபதி பெண்கள் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்விழாவில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,000 கோடி கடன் உதவியை அவர் வழங்குகிறார். ராஜஸ்தானின் ஜோத்பூரில் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் 75ம் ஆண்டு பவள விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அங்கு அவர் உயர் நீதிமன்ற அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்கிறார்.