Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

இந்தியா தனித்து விடப்பட்டுள்ளது.. வெளிநாடுகளுக்குச் சென்று போட்டோசூட் எடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா?: மல்லிகார்ஜுன கார்கே காட்டம்!!

டெல்லி: மோடியின் வெளியுறவுக் கொள்கையால், இந்தியா தனித்து விடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒன்றிய அரசிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;

*கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார், ஆனால் பாகிஸ்தானை அம்பலப்படுத்த இந்தியாவிற்கு சர்வதேச ஆதரவு தேவைப்பட்டபோது, ​​வேறு எந்த நாடும் எங்களை ஆதரிக்க முன்வரவில்லை.

*கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் மோடி 72 நாடுகளுக்கு 151 முறை வெளிநாட்டுப் பயணம் செய்திருக்கிறார். இதில், அமெரிக்காவிற்கு மட்டும் 10 முறை சென்றுள்ளார். இருந்தும், மோடி அரசின் வெளியுறவுத் துறை கொள்கையின் கீழ், நமது இந்தியா தனியாகவே நிற்கிறது. ஆக, வெளிநாடுகளுக்கு செல்வதும், அங்கே போட்டோகளுக்கு போஸ் கொடுப்பது மட்டுமே பிரதமரின் வேலையா?

*சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 1.4 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. ஆனால், யாரும் இந்தியாவின் கூற்றுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே, ஏன்?

*நமது துணிச்சலான ஆயுதப்படைகள் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஏன்?

*இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை "நான் மத்தியஸ்தம் செய்தேன்" என்று கூறி அமெரிக்க ஜனாதிபதி நம் நாட்டை அவமதித்துள்ளார், மேலும் இதை 7 முறையாவது திரும்பத் திரும்பச் சொன்னார்.

*பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையில் முழு நாடும் ஒன்றுபட்டது, ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு இதுவரை தெளிவுபடுத்தாமல் மோடி ஜி இந்த பிரச்சினையை மறைக்க முயற்சிக்கிறார்.

*இந்த மாதிரியான சூழல்களில் பாகிஸ்தானின் முகத்திரையைக் கிழிக்க இந்தியாவிற்கு சர்வதேச நாடுகளின் உதவி தேவைப்பட்டது. ஆனால், எந்த நாடும் நமது உதவிக்கு வரவில்லையே ஏன்? என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.