பயிற்சி: 10 + 2 Technical Entry Scheme- 51. மொத்த காலியிடங்கள்: 90.
வயது வரம்பு: 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.2005க்கும் 01.01.2008க்கும் இடைப்பட்ட தேதியில் (2 தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை ஒரு பாடமாகக் கொண்டு 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.56,100-1,77,500.
உடற்திறன் தகுதி: 15 நிமிடங்களுக்குள் 2.4 கி.மீ தூரம் ஓடிக் கடக்க வேண்டும். 20 புஷ்அப்கள், 20 சிட்அப்கள,் 8 சின்அப்கள் எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் ஏறிக் கடக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வு 2023ல் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வானது ஸ்டேஜ்-1 மற்றும் ஸ்டேஜ்-2 என இரு கட்டங்களாக நடைபெறும்.
ஸ்டேஜ்-1 தேர்வில் உளவியல் மற்றும் குழு விவாதம் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஸ்டேஜ்-2 ல் உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு நடைபெறும்.
அலகாபாத் (உ.பி), போபால் (ம.பி), பெங்களூரு (கர்நாடகா), கபூர்தாலா (பஞ்சாப்) ஆகிய மையங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும். தேரந்்தெடுக்கப்படுபவர்களுக்கு 5 வருட பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை ராணுவ பயிற்சி ஒரு வருடமும், ராணுவ ெதாழில்நுட்பப் பயிற்சி 3 வருடமும் வழங்கப்படும். ராணுவ அதிகாரிக்கான பயிற்சி ஒரு வருடம் வழங்கப்படும். 5 வருட பயிற்சி முடித்ததும் ராணுவத்தில் லெப்டினென்ட் ஆக பணியமர்த்தப்படுவர். ஜூலை 2024ல் பயிற்சி ஆரம்பமாகும்.
தகுதியானவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து நேர்முகத் தேர்வின் போது அனைத்து சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.11.2023.