Monday, September 9, 2024
Home » பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூலித் தொழிலாளி மகள் வரலாற்று சாதனை; 600-க்கு 600 மதிப்பெண் பெற்று அசத்தல்..!!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூலித் தொழிலாளி மகள் வரலாற்று சாதனை; 600-க்கு 600 மதிப்பெண் பெற்று அசத்தல்..!!

by Kalaivani Saravanan

திண்டுக்கல்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி எஸ்.நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். தேர்வில் பங்கேற்ற 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி எஸ்.நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார். அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.நந்தினி அசத்தியுள்ளார்.

சரவணக்குமார் – பானுப்பிரியா தம்பதியின் மகள் நந்தினி அனைத்து பாடங்களிலும் சதம் எடுத்து அபார சாதனை புரிந்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் மாணவி ஒருவர் 600-க்கு 600 மதிப்பெண் பெறுவது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்து பேட்டியளித்த மாணவி எஸ்.நந்தினி; எனது தந்தை கூலித் தொழிலாளி; படிப்புதான் ஒரே சொத்து என கூறி பெற்றோர் என்னை வளர்த்தனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் அளித்த ஊக்கத்தால்தான் சாதனை படைக்க முடிந்தது என்றார். மேலும் தான் ஆடிட்டராக விரும்புவதாக கூறினார். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே எனது ஆசை; அதற்காகவே கடினமாக படித்தேன் எனவும் மாணவி எஸ்.நந்தினி தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi