பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 35 வயது பெண். வீட்டு வேலை செய்கிறார். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இவரது மூத்த மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்துவந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத போது காதலன் வந்து சிறுமியுடன் ஜாலியாக இருந்து வந்ததால் கர்ப்பம் அடைந்துள்ளார். இதையடுத்து தெரிந்தவர்கள் மூலம் கருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளார். இதனால் கடும் வயிற்றுவலி ஏற்பட்டு அவதிப்பட்டதால் உடனடியாக மாணவியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, எம்கேபி.நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை கர்ப்பமாக்கிய கொருக்குப்பேட்டையை சேர்ந்த தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.