டெல்லி: பூமித்தாயை பாதுகாப்பது, பராமரிப்பது நமது அடிப்படை கடமை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் ஜி20 நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை குறித்த அமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். திருக்குறளை மேற்கோள் காட்டி உரையை தொடங்கிய மோடி, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மாமல்லபுரத்தின் அனுபவத்தை உங்களால் பெற முடியும். நெடுங்கடலும் தண்ணீரும்..என்ற குரலை 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புனித துறவியான திருவள்ளுவர் கூறியுள்ளார்.
நெடுங்கடலும் தன்நீர்மை என்ற குறளை 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்தியாவில், இயற்கையும் அதன் அடிப்படையில் வழக்கமான கற்றலுக்கான ஆதாரமாக திகழ்கிறது. பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் தெற்குலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இயற்கை நமக்கு வழங்குவதைப் போல நாமும் இயற்கைக்கு வழங்க வேண்டும். பூமித்தாயை பாதுகாப்பது பராமரிப்பது என்பது நமது அடிப்படை கடமை என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டு வர ஜி20 நாடுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவிலான சட்டப்பூர்வ கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் அடிப்படையில் உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். பல்லுயிர் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.