நாகர்கோவில்: நாகர்கோவில் புளியடியில் 3 டன் பிளாஸ்டிக் பொட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், ஒரு முறை பயன்படுத்தும், பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், தெர்மாகோல் தட்டுகள் விற்பனை செய்யும் கடைகள், மொத்த விற்பனை கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வடசேரி புளியடி பகுதியில் மொத்த விற்பனை கடையின் குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பதாக மாநகராட்சிக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து இன்று காலை மாநகர் நல அலுவலர் ஆல்பர் மதியரசு தலைமையில் மாநகராட்சி சுகாதார்பிரிவு அதிகாரிகள் புளியடியில் உள்ள குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தெர்மா கோல் தட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவற்றை மாநராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குடோனுக்கு சீல் வைத்தனர். பின்னர் குடோன் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.