டெல்லி: வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்தாலும் சுயமரியாதை திருமணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்த திருமணம் செல்லாது என சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்து திருமண சட்டத்தில் 7ஏ என்ற பிரிவை சேர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.