நன்றி குங்குமம் டாக்டர்
ஆரோக்கியமான புரதச்சத்து நிறைந்த கொட்டை வகைகளில் ஒன்று பிஸ்தா. உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. நார்ச்சத்து, நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேர்மங்களை கொண்ட ஆரோக்கியமான கொட்டையான பிஸ்தாவின் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
பிஸ்தா 20 % புரதத்தினால் ஆனது. பெரும்பாலான கொட்டைகளை விட அதிக கலோரிக்கு புரத விகிதம் கொண்டுள்ளன. இந்த புரதம் நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும் என்பதால் எடையை நிர்வகிக்க உதவும்.
சீரான உணவை பராமரிக்கும் முறையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை எடுத்துf;கொண்டாலும் சில உணவுகளில் தாதுக்கள் இல்லை என்றால் அது உடலில் வைட்டமின் பி12, இரும்புச்சத்து, அயோடின் போன்ற குறைபாடுகளை உண்டு செய்யும். இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய உதவும் உணவுகளில் பிஸ்தாவும் ஒன்று. இதன் அடர்த்தியான ஊட்டச்சத்து பண்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு வேண்டிய தாவர புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களை கொண்டுள்ளன. இதய ஆரோக்கியத்துக்கு கொழுப்புகளை அளிக்கின்றன. தினசரி உணவு முறையில் பிஸ்தாவை சேர்ப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரித்து உடலில் பல சத்து குறைபாடுகளை சமாளிக்க உதவும்.
இரத்த நாளங்களின் ஆரோக்கியம்
பிஸ்தா அமினோ அமிலமான- எல்- அர்ஜுனைன் முலம். இது உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகிறது இந்த சிறிய கொட்டைகள் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.நாள் ஒன்றுக்கு கால் கப்- அரை கப் வரை பிஸ்தா சாப்பிடலாம்.
பிஸ்தாவை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் ஊறவைக்கலாம். இதனால் மென்மையாகவும் ஊட்டச்சத்தும் அதிகரிக்க செய்கிறது. பிஸ்தாவை 5- 6 மணி நேரம் ஊறவைக்கலாம். ஆயுர்வேதம் பிஸ்தாவை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது ஜீரணத்தை மேம்படுத்தும் என தெரிவிக்கிறது.பிஸ்தா நன்மையே என்றாலும் அளவு குறைத்து சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உடல் பருமனை ஏற்படுத்தும்.
தொகுப்பு: தவநிதி