நாகை: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கினர். 3 அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 10 பேர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து தாக்கினர். கத்தி, அரிவாள், ரப்பர் தடி கொண்டு தாக்கியதில் தங்கதுரை, ராஜா, மணிகண்டன் ஆகிய 3 மீனவர்கள் காயம் அடைந்தனர். 500 கிலோ வலை, எஞ்சின் , செல்போன், பிடித்து வைத்திருந்த மீன்களை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
previous post