பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக சென்னையில் பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நவம்பர் 23ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட தகுதி தற்போது நீக்கப்பட்டுள்ளது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், வயது வரம்பு 25 முதல் 45 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யார் பயன் பெறலாம்?
* 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்ட தகுதி நீக்கம்.
* பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும்.
* 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
* சென்னையில் குடியிருக்க வேண்டும்
இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ் நாடு அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர்கள் (வடக்கு மற்றும் தெற்கு), 8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 600001 என்ற முகவரிக்கு 23.11.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
– கவின்.