சென்னை: அமெரிக்க கண் மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், ஊசித்துளை கண் அறுவை சிகிச்சைக்காக டாக்டர் அமர் அகர்வால் விருது பெற்றுள்ளார். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற ஏஎஸ்சிஆர்எஸ் மாநாடானது, அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கொண்ட கண் மருத்துவ சங்கங்களுள் ஒன்றாகும்.
ஊசித்துளை கண் அறுவைச் சிகிச்சை (பியூப்பிலோபிளாஸ்டி) என்பது மீதான முன்னோடித்துவ கண்டுபிடிப்பு பணிக்காக ஏஎஸ்சிஆர்எஸ் மாநாட்டில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். அமர் அகர்வால் விருது பெற்றார்.
இவ்விருது தொடர்பாக டாக்டர். அமர் அகர்வால் கூறியதாவது:
ஊசித்துளை பியூப்பிலோபிளாஸ்டி உத்தியானது, உலகெங்கிலும் எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள கண் மருத்துவ நிபுணர்களால் இந்த மருத்துவ செயல்முறையை பயன்படுத்துவது அதிகரித்து வருவதை காண்பது உண்மையிலேயே மனநிறைவையும், பெருமிதத்தையும் தருகிறது. இன்றைக்கு உலகெங்கிலும் எண்ணற்ற கண் மருத்துவ நிபுணர்களால் ஊசித்துளை பியூப்பிலோபிளாஸ்டி பரவலாக செய்யப்பட்டு வருகிறது. அறுவைசிகிச்சையின் எளிமையும் மற்றும் நோயாளிக்கு அதிக சௌகரியமும் தருவதாக இது இருப்பதே இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.