Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிச்சாட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 2,200 கனஅடி நீர் திறப்பால் ஆரணியாற்றில் வெள்ளம்: கரைகளை எம்எல்ஏ ஆய்வு

ஊத்துக்கோட்டை: பிச்சாட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 2,200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் மழையால் பிச்சாட்டூர் அணை நிரம்பியது. இந்த அணையின் கொள்ளளவு 281 மில்லியன் கன அடியாகும். நேற்று முன்தினம் 277 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்ததால் நேற்று காலை 10.30 மணிக்கு ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகள் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீரை திறந்து வைத்தனர்.

இந்த அணையில் மொத்தம் 4 மதகுகள் உள்ளன. இதில் ஒரு மதகின் வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 200 கன அடியும் பின்னர் நள்ளிரவு 2,000 கன அடியும் என கூடுதலாக 2,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பிச்சாட்டூர் அணைக்கு மழைநீர் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 1.85 டிஎம்சி ஆகும். தற்போது 1.30 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிச்சாட்டூர் அணையிலிருந்து கூடுதலாக 2,200 கன அடி நீர் திறக்கப்பட்டதால் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் அணைக்கட்டு, மனோபுரம், ஆண்டார் மடம் தடுப்பணை ஆகியவற்றை நேரில் சென்று துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆய்வு செய்தனர். பின்னர் செய்தார்களிடம் பேசிய அவர், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆரணி ஆட்டம் கரையோரங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பிச்சாட்டூரில் இருந்து 2200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இங்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பழவேற்காடு அருகே உள்ள ஆண்டார் மடம்- கடப்பாக்கம் சாலை மிகுந்த பழுதடைந்துள்ள நிலையில் 30 ஆண்டு காலமாக மக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். தற்போது இந்த சாலையை செப்பனிட நான்கு கோடியில் திட்டப்பணிகள் துவங்கப்பட உள்ளன எனவும் மீஞ்சூர் பகுதியில் தண்ணீரால் சூழப்பட்டுள்ள இடங்களில் வேகமாக பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் தண்ணீர் வடிந்து அங்குள்ள மக்கள் இயல்பு நிலைக்கு வருவார்கள் என கூறினார்.

இந்த ஆய்வின் போது மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் நட்ராஜ், குணசேகரன், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன், நீர்வளத்துறை அதிகாரிகள் நந்தகுமார், முருகன், கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.