திருவனந்தபுரம்: கேரள நடிகைகள் கூட்டமைப்பை ஆதரித்ததற்காக தொலைப்பேசியில் மர்மநபர்கள் மிரட்டல் விடுத்ததாக நடிகை பாக்கியலட்சுமி புகார் அளித்துள்ளார். மலையாள நடிகைகள் கூட்டமைப்பை ஆதரித்தால் தாக்கப்படுவாய் என்று தனக்கு மிரட்டல் வந்ததாக மலையாள திரைப்பட நடிகையும், பின்னணி குரல் கலைஞர் மற்றும் சங்க செயல்பாட்டாளருமான பாக்கியலட்சுமி குற்றச்சாட்டியுள்ளார். மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு திரையுலகினரிடம் விசாரணை நடத்தி தந்த அறிக்கையை அரசு அண்மையில் வெளியிட்டது. அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து இயக்குநர்கள், நடிகர்கள் மீது பல நடிகைகள் பகிரங்கமாக புகார் கூறி வருகின்றனர்.