Sunday, February 25, 2024
Home » ஐதராபாத்தில் பெட்ரோல் தட்டுப்பாட்டால் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஊழியர்: வலைதளத்தில் வீடியோ வைரல்

ஐதராபாத்தில் பெட்ரோல் தட்டுப்பாட்டால் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஊழியர்: வலைதளத்தில் வீடியோ வைரல்

by Dhanush Kumar

திருமலை: ஐதராபாத்தில் பெட்ரோல் தட்டுப்பாட்டால் குதிரையில் சென்று ஊழியர் உணவு டெலிவரி செய்தது வலைதளத்தில் வீடியோ வைரலாகி உள்ளது. புதிய தண்டனை சட்டத்தில் வாகன விபத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து வடமாநிலங்களில் லாரி டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் மக்கள் தவிக்கின்றனர்.

அதேபோல் தெலங்கானாவிலும் நேற்றுமுன்தினம் டேங்கர் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பெட்ரோல் டீசல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெட்ரோல் இல்லை என்ற போர்ட் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று ஐதராபாத்தில் உள்ள சென்ச்சுலகூடாவில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi