காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் இளையனார்வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.கமலக்கண்ணன் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் இளையனார் வேலூர் ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்தந்த பகுதிகளுக்கு ரேஷன் கடை உள்ளது. ஆனால், வள்ளிமேடு என்ற பகுதியில் மட்டும் ரேஷன் கடை இல்லை.
இதனால், அப்பகுதி மக்கள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வள்ளிமேடு பகுதியில் 180 ரேஷன் கார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் நலன்கருதி வள்ளிமேடு பகுதியிலேயே புதிய ரேஷன் கடை கட்டித் தந்து, ரேஷன் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.