லிமா : தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் வழக்கத்திற்கு மாறாக நிலவி வரக்கூடிய கடும் வறட்சியால் அந்த நாட்டின் அடையாளங்களில் ஒன்றான லாமா விலங்குகள் தீவினம் கிடைக்காமல் உயிரிழக்கத் தொடங்கி உள்ளன. பெரு என்றாலே பெரு மழை, பெரு வெள்ளம் மட்டுமே அடையாளமாக இருந்து வருகிறது. கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு கூட பெருவின் சில பகுதிகளில் கனமழையால் பெரும் பொருட் சேதம் ஏற்பட்டது. ஆனால் அந்த நாட்டின் தென் கோடியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கடும் வறட்சி நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் காய்ந்து கருகி போன தாவரங்கள் மட்டுமே காணக்கிடைக்கிறது. பசுமையையே பார்க்க முடியாத அளவிற்கு பகலில் சூரியன் சூட்டடித்து வருகிறது.
இதனால் தென் அமெரிக்காவின் சிறப்பு விலங்காக கருதப்படும் லியானா எனப்படும் லாமாக்கள் தீவினம் கிடைக்காமல் தவித்து வருகின்றன. ஒட்டக இனத்தின் நெருங்கிய உறவினரான லாமாக்கள் குட்டையான, திமிலற்ற பொதி சுமக்கின்ற வீட்டு விலங்காகும். தீவினம் கிடைக்காதது மற்றும் இரவில் நிலவும் கடும் குளிரால் புனோ நகரில் மட்டும் லாமாக்கள் உட்பட 2,300 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. புனோ நகரில் நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.