பெரு நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். அயகுசசோவில் இருந்து ஹுவான்காயோ நகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியதாக பெரு போக்குவத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. பேருந்தின் லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டதுடன் விபத்துக் காப்பீடு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பெரு நாட்டில் உள்ள தரமற்ற சாலைகள் மற்றும் பராமரிப்பின்றி இயங்கும் பேருந்துகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பயணிகள் உயிரிழந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.