உலகத்தில் உள்ள விலங்குகளிலேயே நீலத் திமிங்கலம் தான் மிகப்பெரிய விலங்கினம் என்று நம்பப்பட்டு வரும் நிலையில், அதை விட பெரிய ஆரம்ப கால திமிங்கலத்தின் புதை படிவங்களை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.சமீபத்தில் பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகால திமிங்கலத்தின் புதை படிவங்களை விஞ்ஞானிகள் ஜகா நகரில் காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த பிரம்மாண்ட விலங்கு ஈசன்ஸ் சகாப்தத்தின் போது, அதாவது சுமார் 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். பெருவில் கண்டறியப்பட்டதால் அதற்கு பெருசெட்டஸ் கொலோசஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ராட்சத திமிங்கலம் சுமார் 66 அடி நீளமும் 340 மெட்ரிக் டன் வரையும் எடைக் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.