தென் அமெரிக்க நாடான பெருவில் இன்கா பழங்குடியின சமூகத்தினரின் சூரியனுக்கு மரியாதை செலுத்தும் பாரம்பரிய ஆண்டு விழா வண்ணமயமாக நடைபெற்றது. பெருவின் கஸ்கோ நகரத்தில் உள்ளது வரலாற்று புகழ்மிக்க சஸ்கா யுவாமா தொல்பொருள் தளம். இன்கா பழங்குடியினரின் சூரிய வழிபாடு ஆண்டு விழாவையொட்டி இப்பகுதி முழுவதும் களைகட்டி இருந்தது. இன்டி ரோமி என்று அழைக்கப்படும் இந்த திருவிழாவை காண பெரு மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்திருந்தனர்.
பெருவில் நடைபெற்ற இன்கா பழங்குடியினரின் பாரம்பரியத் திருவிழா..!!
0