சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்க கொண்டு வரப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஊராட்சிகளில் விளம்பரங்களை காட்சிப்படுத்தும் முறை தொடர்பான மசோதாவும் நிறைவேறியது. ஊராட்சிகளில் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களை அகற்றும் முறை தொடர்பான மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்க கொண்டு வரப்பட்ட மசோதா நிறைவேற்றம்
0