சென்னை: மாற்றுத்திறனாளிகளின் நலன் பேணும் அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அனைத்து உயிர்களும் ஒன்று, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை எனவும் பேசியுள்ளார்.