சென்னை: சென்னையில் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட வேலு முருகானந்தம் (54) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட புகாரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் எண்ணைக் கொண்டு ஆய்வு செய்து வேலு முருகானந்தம் என்பவரை சைபர் கிரைம் போலீஸ் கைது செய்தது.