ஒரு நபரின் சித்தாந்தத்திற்காக அவரை சிறையில் அடைக்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கில் கைதான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயலாளர் சி.ஏ.ரவுப் ஜாமின் கோரி மனு. குற்றங்கள் செய்யாமல் தடுக்கும் நோக்கில் ரவுப்பை சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு வாதாடியது.