*கோவை கோர்ட் தீர்ப்பு
கோவை : கோவை பேரூர் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சுமார் 62 வயது மூதாட்டி மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி (45) என்பவர் இந்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுசாமியை கைது செய்தனர். இவர் மீதான வழக்கு விசாரணை கோவை எஸ்.சி., எஸ்.டி கோர்ட்டில் நடந்து வந்தது.
சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை, ஆவணங்கள் சரிபார்ப்பு என அனைத்தும் நிறைவுற்ற நிலையில், இவ்வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, வேலுசாமி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 16 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு கூறினார்.