சென்னை: வீட்டுசவதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்ட அறிவிப்பு: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின்போது 2016ம் ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், முன்பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனிமனையை வாங்கிய பொதுமக்கள் வரன்முறைக்கு உரிய காலத்தில் விண்ணப்பிக்காமல் இருந்தாலும் அவர்கள் பயன்பெறும் வகையில் 20.10.2016க்கு முன் பதிவு செய்யப்பட்ட விற்பனை ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அந்த தனிமனையை எவ்வித காலக்கெடுவுமின்றி இணைய வழி மூலம் விண்ணப்பம் பெற்று ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றமில்லாமல் வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம். தமிழ்நாடு அங்கீகரிக்கப்படாத மனைபிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் விதி 2017க்கான உரிய திருத்தம் பின்னர் வெளியிடப்படும்.