கூடலூர்: பெரியாறு அணையில் துணை குழு நேற்று ஆய்வு செய்தது. பின்னர், தமிழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘அணையில் உள்ள 13 மதகுகளில் 2, 4 மற்றும் 5வது மதகின் இயக்கம் சரி பார்க்கப்பட்டது. அதுபோல் சீப்பேஜ் வாட்டர் (கசிவு நீர்) அளவு 62 லிட்டர் என தற்போதைய நீர்மட்டத்திற்கு மிக துல்லியமாக இருந்தது. இதனால் அணை மிகுந்த பலத்துடன் உள்ளது என துணைக்குழுவினர் திருப்தி தெரிவித்துள்ளனர்’’ என்றனர்.