சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்து பணி ஓய்வு பெற்ற தங்கவேலுவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பையும், உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் மீறி ஓய்வுக்கால பயன்களையும், தற்காலிக ஓய்வூதியத்தையும் வழங்கி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார்.
தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பணி நீக்கம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் பொறுப்புக்குழு அமைக்க வேண்டும். தங்கவேலுவுக்கு ஓய்வூதியம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்.