ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, வெங்கல்-சீத்தஞ்சேரி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் பெரியபாளையம் பஜார் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் பெண் புள்ளி மான் ஒன்று புகுந்துள்ளதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், பெரியபாளையம் போலீசார் மற்றும் சீத்தஞ்சேரி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து புள்ளிமானை மீட்டுச்சென்றனர்.
இதேபோல், கடந்த சில நாட்களாக பெரியபாளையம் பகுதியில் அரிய வகை குரங்கு ஒன்று பழக்கடையில் புகுந்து பழங்களை எடுத்துச்செல்வது, ஆட்களை கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. எனவே, அந்த அரியவகை குரங்கை வனத்துறையினர் பிடித்து செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வலியுறுத்தியுள்ளனர்.