ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் மற்றும் கன்னிகைப்பேர் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார். பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பெரியபாளையம் மற்றும் கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர்கள் சம்பத், பேரின்ப செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் சத்தியவேலு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர்கள் சீனிவாசன், முனுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு பெரியபாளையம் மற்றும் கன்னிகைப்பேர் அரசு மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 181 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ், ராமமூர்த்தி, ரவிக்குமார், ரவிச்சந்திரன், தனசேகர், சம்பத், ராஜா, அப்புன், சுமன், குணசேகரன், சம்பத், அசோக், தமிழரசன், பெரியசாமி, பன்னீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.