ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமத்தில் விவசாய நிலத்தில் தண்ணீர் குடிக்க வந்த ஆண் புள்ளிமானை நாய் ஓடஓட விரட்டி சென்று கடித்து குதறியுள்ளது. அப்பகுதி மக்கள், நாயை விரட்டிவிட்டுவிட்டு புள்ளிமானை மீட்டனர்.
தகவலறிந்து வந்த செங்குன்றம் வன அலுவலர் மற்றும் வனக்காவலர்களிடம் புள்ளிமானை ஒப்படைத்தனர். நாய் கடித்தத்தில் படுகாயமடைந்த புள்ளிமானை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர்.