திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே பேரிஜம் ஏரியில் தொடங்கப்பட்ட படகு சவாரி கைவிடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. பேரிஜம் ஏரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு படகு சவாரியை வனத்துறை தொடங்கி இருந்தது.பெரியகுளம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதால் படகு சவாரி மேற்கொள்ளக்கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது.