பெரம்பலூர்: பெரம்பலூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜகவினர் 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்குவாரி ஏலம் தொடர்பான கலவரத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.