பெரம்பலூர்: மலையாளப்பட்டி ஊராட்சியில் தடுப்பணைகள் கட்டியதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019-20ல் 6 தடுப்பணைகள் மட்டுமே கட்டிவிட்டு 45 தடுப்பணைகள் கட்டியதாக கூறி நிதி மோசடி என வழக்கு பதியப்பட்டுள்ளது. ரூ.30.03 லட்சம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிடிஓ அறிவழகன், இளநிலை பொறியாளர் நாகராஜன், ஓவர்சீயர் மணிவண்ணன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. தனியார் ஒப்பந்ததாரர்கள் துரைசாமி, சதீஷ்குமார், வெற்றிவேல், ராணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.