பெரம்பலூர்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் தழுதாழையில் 10 செ.மீ. மழை மழை பதிவாகியுள்ளது. மஞ்சளாறு மற்றும் ஆண்டிபட்டியில் தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. முசிறி, தலைவாசலில் தலா 7 செ.மீ., நடுவட்டம், திருப்பூர், வேப்பந்தட்டையில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தேன்கனிக்கோட்டை, வாடிப்பட்டியில் தலா 5 செ.மீ., சிறுகுடி, குளித்தலையில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியது.