பாடாலூர்: பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 13 பவுன் நகை திருடி சென்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூரை சேர்ந்த விவசாயி மாதவன் (58). இவர் நேற்றிரவு தனது மாடி வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு திண்ணையில் மனைவியுடன் தூங்கி கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு மாதவன் எழுத்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப் பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 13 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்ததும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.
கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி திருட்டு நடக்கிறது. எனவே திருட்டை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.