பெரம்பலூர்,டிச.7: வெள்ளனூர் கிராமத்தில் வயலில் சாராய ஊரல் போட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வெள்ளனூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராஜேந்திரன்(55). இவர் தனக்கு சொந்தமான வயலில் சாராய ஊரல் போட்டு உள்ளதாக பெரம்பலூர் ஊரக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் ஊரக காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையில் போலீசார் ராஜேந்திரன் வயலில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு 50 லிட்டர் பேரலில் 30 லிட்டர் சாராய ஊரல் போட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜேந்திரனை கைது செய்து சாராய ஊரலை கைப்பற்றினர்.
+
Advertisement


