திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தில் காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம் சார்பில் 29ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான விழா கடந்த 19ம் தேதியன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று இரவு கோயில் வளாகத்தில் ஐயப்ப சுவாமிக்கு வண்ண மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு வைத்து ஐயப்பனை வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஒவ்வொரு வீட்டிலும் பொதுமக்கள் சுவாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோயிலில் ஐயப்பனுக்கு திருவிளக்கு பூஜை
0