சென்னை: ஆக.31-ம் தேதி காலை மட்டும் ஃபார்முலா-4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆக.31-ம் தேதி பிற்பகல் தகுதிச் சுற்று போட்டிகள் தொடங்கி இரவு வரை கார் பந்தயம் நடைபெறும். 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கார் பந்தயம் நடைபெறும்போது போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இருக்காது. சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா-4 கார் பந்தயம் தொடர்பான ஆலோசனைக்குப் பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.