சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாகவே நல்லது செய்யும் எண்ணம் அண்ணாமலைக்கு இல்லை என ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். “மக்களுக்கு உண்மையாகவே நல்லது செய்யும் எண்ணம் இருந்தால் பா.ஜ.க. தலைவர் பதவியை அண்ணாமலை ராஜினாமா வேண்டும். ஒன்றிய அரசு தமிழ்நாட்டையே புறக்கணித்துள்ளதற்கு அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.