டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 3 நாட்களில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி மக்கள் பீதி அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ, கோரக்பூர் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது . டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.