ஆவடி: ஆவடியில் போலீசார் நடத்திய வேட்டையில் 60 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் ரவுடிகள் வேட்டை நேற்று நடந்தது. இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் கொலை, கஞ்சா மற்றும் சரித்திர பதிவேடுகளில் சம்மந்தப்பட்ட 60 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில் கொலை குற்றங்களில் சம்மந்தப்பட்டவர்கள் 28 நபர்கள், கொலை முயற்சி வழக்குகளில் 11 பேர், கஞ்சா வழக்குகளில் 1 நபர், பிடியணை குற்றவாளிகள் 1 நபர் மற்றும் இதர முக்கிய வழக்குளில் சம்மந்தப்பட்ட 19 பேர் உள்பட 60 பேரை கைது செய்தனர். ரவுடிகள் மீதான அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.