Sunday, April 14, 2024
Home » காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் சிக்கினர்

காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் சிக்கினர்

by Ranjith

பெரியபாளையம்: காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியில் தமிழ்நாடு அரசால் கடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக, ஆரணி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார், ஆரணி பஜார் வீதியில் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்துக்கிடமாக செல்போன் மூலம் நம்பர் எழுதிக்கொண்டிருந்த 6 நபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், ஆரணி பகுதி சேர்ந்த பாலகிருஷ்ணன்(52), நாகராஜ்(60), முரளி(60), கோடீஸ்வரன்(60), சர்யையா(63), ராமகிருஷ்ணன்(37) என்பதும், இவர்கள் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, குற்றச்செயலில் ஈடுபட்ட 6 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 4 செல்போன்கள், 1 லேப்டாப் 5,400 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், காட்டன் சூதாட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் யார்? யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

five + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi