Saturday, April 13, 2024
Home » மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 384 மனுக்கள் பெறப்பட்டன

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 384 மனுக்கள் பெறப்பட்டன

by Ranjith

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 384 மனுக்கள் பெறப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று‌ நடந்தது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 384 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி அலகில் 2018-2021 ஆண்டுகளில் கொடிநாள் வசூல் ரூ.3 லட்சம் மேல் ரூ.5 லட்சம் வரை வசூல் செய்த 8 மாவட்ட அலுவலர்களுக்கு 30 கிராம் வெள்ளிப்பதக்கம் மற்றும் தலைமை செயலாளரால் வழங்கப்பட்டு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.5 லட்சம் மேல் வசூல் செய்த 8 மாவட்ட அலுவலர்களுக்கு 30 கிராம் வெள்ளி பதக்கங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை கழகம் சார்பில், நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, ஜெயின் கல்லூரியில் பயிலும் ஜனகன் என்ற மாணவர் ஸ்கேட்டிங்கில் 10.1 கிமீ தூரத்தினை 40 நிமிடம் 42 வினாடிகளில் கடந்து ‘ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெகார்ட்ஸ்’ சாதனை புரிந்துள்ளதை மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றார்.

இந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வின், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜோதி சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

4 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi