Thursday, September 19, 2024
Home » மக்கள் குறைதீர் கூட்டம் நீரில் மூழ்கி இறந்தவரின் வாரிசுதாரருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.1 லட்சம்: காஞ்சி கலெக்டர் வழங்கினார்

மக்கள் குறைதீர் கூட்டம் நீரில் மூழ்கி இறந்தவரின் வாரிசுதாரருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.1 லட்சம்: காஞ்சி கலெக்டர் வழங்கினார்

by Ranjith

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், நீரில் மூழ்கி இறந்தவரின் வாரிசுதாரருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமைதோறும், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 318 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், நீரில் மூழ்கி இறந்தவரின் வாரிசுதாரருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

3 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi