அலெக்ஸாண்ட்ரூபோலிஸ்: வடகிழக்கு கிரீஸ் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ எரிந்து வருகின்றது. அலெக்ஸாண்ட்ரூபோலிஸ் பகுதியில் உள்ள அவந்தாவில் குடிசைக்கு அருகே காட்டுத்தீயில் சிக்கி இறந்த 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகின்றது.